புதன், 11 மார்ச், 2015

ஏரல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்க வடிகால் வசதி இல்லாமல் அழியும் வெற்றிலை விவசாயம்

ஏரல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான திருவழுதிநாடார்விளை, வாழவல்லான், லெட்சுமிபுரம், உமரிக்காடு, முக்காணி, ஆத்தூர், மேல ஆத்தூர், சேதுக்குவாய்த்தான், சொக்கப்பழங்கரை, மரந்தலை, வெள்ளக்கோயில், சுகந்தலை உள்பட பகுதிகளில் உள்ள வயல்களில் வெற்றிலை பயிர் செய்யப்படுகிறது. ஐப்பசி மாதம் வெற்றிலை கொடிக்கால் தொழிலை விவசாயிகள் தொடங்குகின்றனர்.
இங்குள்ள வயல்களை முதலில் 3 வருடங்களுக்கு கட்டுக்குத்தகைக்கு எடுத்து கான்களை தோண்டி முதலில் அகத்தி மற்றும் முருங்கை மர விதைகளை ஊன்றுகின்றனர். ஒருநாள் விட்டு ஒருநாள் கான்களில் தேங்கியுள்ள தண்ணீரை இறைத்து விதைகளுக்கு பாய்ச்சுகின்றனர். 60 நாட்கள் கழித்து வெற்றிலை கொடியை நட்டு அதனை முருங்கை மற்றும் அகத்தி மரத்தில் படரவிடுகின்றனர். 5 மாதம் கழித்து வெற்றிலை பறிக்கத் தொடங்குகின்றனர். ஒரு வெற்றிலை கொடிக்கால் இரண்டரை ஆண்டுகள் வரை பலன்தரும்.
வெற்றிலை சக்கை, மாத்து, பொடி வெற்றிலை என மூன்று வகையாக தரம் பிரிக்கப்படுகிறது. சக்கையும் மாத்தும் டெல்லி, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப் படுகின்றன. பொடி வெற்றிலை பக்கத்து மாவட்டங்களுக்கு அனுப்பப் படுகிறது. வெற்றிலை படர விடுவதற்காக நடும் முருங்கையிலிருந்து காயும், அகத்தியில் இருந்து கீரையும் கிடைப்பதால் வெற்றிலை விவசாயம் வெற்றிகரமான விவசாயமாக விளங்குகின்றது.
வெளிமார்க்கெட்டுக்கு அனுப்பும் வெற்றிலையின் விலையை இப்பகுதியின் வெற்றிலை விவசாயத்தின் தலைமையிடமாக செயல்படும் தெற்கு ஆத்தூர் வெற்றிலை கொடிக்கால் சங்கம் தான் நிர்ணயிக்கிறது. தற்போது சக்கை வெற்றிலை ஒரு கிலோ ரூ.108க்கும், மாத்து ரூ.129க்கும், பயிர் சாதா வெற்றிலை ரூ.50க்கும், முதுகால் வெற்றிலை ரூ.55க்கும் விற்பனை ஆகிறது. ஆனாலும், மழையினால் ஏரல் பகுதியில் வெற்றிலை சேதமடைந்துள்ளதால் வெற்றிலை பறிப்பு பாதியாக குறைந்துள்ளது.
வடிகால் வசதி இல்லாமல் அழியும் வெற்றிலை விவசாயம்
வெளிமார்க்கெட்டுக்கு அனுப்பும் வெற்றிலையின் விலையை இப்பகுதியின் வெற்றிலை விவசாயத்தின் தலைமையிடமாக செயல்படும் தெற்கு ஆத்தூர் வெற்றிலை கொடிக்கால் சங்கம் தான் நிர்ணயிக்கிறது. தற்போது சக்கை வெற்றிலை ஒரு கிலோ ரூ.108க்கும், மாத்து ரூ.129க்கும், பயிர் சாதா வெற்றிலை ரூ.50க்கும், முதுகால் வெற்றிலை ரூ.55க்கும் விற்பனை ஆகிறது. ஆனாலும், மழையினால் ஏரல் பகுதியில் வெற்றிலை சேதமடைந்துள்ளதால் வெற்றிலை பறிப்பு பாதியாக குறைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இப்பகுதியில் விவசாயம் நடந்தது. இதனால் 20 ஆயிரம் தொழிலாளர்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பயன்பெற்று வந்தனர். ஆனால் தற்பொழுது வடிகால் வசதி இல்லாததாலும் வறட்சி மற்றும் நோய் தாக்குதலாலும் பரப்பளவு பாதியாக குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிலை விவசாயம் நஷ்டம் அடைந்து வருவதால் விவசாயிகள் வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். எனவே, ஏரலில் அழிந்து வரும் வெற்றிலை விவசாயத்தை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...