ஏரல் வட்டாரத்தில் புதுமனை, அம்மாள்தோப்பு, வாழவல்லான், ஆலடியூர், உமரிக்காடு, முக்காணி, லெட்சுமிபுரம், இரண்டாம் பண்ணைவிளை, குரங்கணி, மாவடிப்பண்ணை, தென்திருப்பேரை, பால்குளம், ஆழ்வார்தோப்பு பகுதிகளில் செங்கல் சூளைகள் மற்றும் சேம்பர் செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் நடந்து வருகிறது. இப்பகுதியில் 15 சேம்பர்களும் நூற்றுக்கு மேற்பட்ட செங்கல் சூளைகளும் உள்ளன.
இதில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மறைமுகமாக 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இதை நம்பி உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6வரை விற்ற சேம்பர் செங்கல் தற்பொழுது ரூ.5 முதல் 5.30 வரை விற்பனையாகிறது.
அதேபோல் ரூ.4க்கு விற்ற சாதா செங்கல் தற்பொழுது அதே விலைக்கு தான் விற்பனையாகி வருகிறது. இந்த 5 ஆண்டுகளில் கூலி உயர்வு, குறுமண் தட்டுப்பாட்டு என உற்பத்தி செலவு அதிகமாகி உள்ளது. செங்கல் விற்பனையும் முந்தைய ஆண்டுகளை விட குறைவாக இருப்பதால் செங்கல் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், செங்கல் தயாரிப்புக்கு தேவையான குறுமண் கிடைப்பது அரிதாக உள்ளது.
இந்த குறுமணலை எடுப்பதற்கும் பசுமை தீர்ப்பாயத்தில் செங்கல் உரிமையாளர்கள் அனுமதி பெற வேண்டும். அனுமதி கேட்டு விண்ணப்பித்தும் அனுமதி கிடைக்காததால் பல செங்கல் உற்பத்தியாளர்கள் திணறிவருகின்றனர். எனவே,குறுமணல் கிடைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென செங்கல் உற்பத்தியாளர்கள் கோருகின்றனர்.
குறுமண் கிடைக்காமல்...
குறுகும்
செங்கல்
தொழில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக