சிவகளை பரும்பு பகுதியில் முஸ்லீம் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மையவாடி இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.
சிவகளை பரும்பு பகுதியில்
முஸ்லீம்களின் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க வேண்டும்
தூத்துக்குடி, மார்ச் 24:
சிவகளை பரும்பு பகுதியில் முஸ்லீம் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மையவாடி இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க தடுப்பு சுவர் கட்டி தரவேண்டுமென கலெக்டரிடம் மனு அளித்தனர்.
சிவகளை முஹ்யித்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் பாசித், செயலாளர் ஜெயிலானி மற்றும் ஜமாத்தார்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
சிவகளை பரும்பு முஸ்லீம் ஜமாத்தினருக்கு சொந்தமான மையவாடி இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து ஆடு, மாடு மேய்ச்சலுக்கு பயன்படுத்துகின்றனர். கழிப்பிடமாகவும் மாற்றி வருகின்றனர். இதில் பஞ்சாயத்து தலைவர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறார்.
எனவே முஸ்லீம் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மையாவடி இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க தடுப்புசுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகளை மெயின்ரோட்டிலிருந்து பரும்புக்கு செல்லும் சாலையில் உள்ள பாலம் பழுதடைந்து தடுப்புசுவர் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
இன்னும் சில தினங்களில் பங்குனி உத்திர திருவிழாவிற்காக ஆயிரக்கணக்கான இந்த சாலையில் செல்லும்போது விபத்து ஏற்பாடாமல் இருக்க தற்காலிக தடுப்பு சுவர் அமைத்தும் அதன் பின்பு நிரந்தரமாக தடுப்பு சுவர் கட்டவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
கலெக்டரிடம் மனு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக