சகல நோய் தீர்க்கும்
சேர்மன் திருமருந்து
திருச்செந்தூர்
தாலுகா அம்மன்புரத் தில் உள்ள மேலப்புதுக்குடியில் அருணாசல சுவாமி அவதரித்தார். பின் ஏரலில் வந்து வசித்த போது தனது குடும்ப பாரம்பரியப்படி தேடி வந்தோர் பிணி தீர்த்துவந்தார். 1906 செப்டம்பர் 5ம் தேதி முதல் 1908 ஜுலை 27ம் தேதி வரை ஏரல் பஞ்சாயத்து போர்டு சேர்மனாக பணியாற்றியதால் இவர் பெயருக்கு முன்பு சேர்மன் என்ற சொல் சேர்ந்தது. வயது 28 ஆனதால் பெற்றோர் திருமணம் செய்ய நினைத்தனர். ஆனால், அவரது சிந்தனை அதில் செல்லவில்லை.
சேர்மனாக பணிபுரிந்தபோது ஒரு நாள் தனது சகோதரர் கருத்தப்பாண்டி நாடாரை அழைத்து � ஒரு வாரத்தில், அதாவது 1908ம் வருடம் ஜுலை 28ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆடி அமாவாசையன்று பகல் 12 மணிக்கு நான் இறைவன் திருவடி சேர்வேன். ஏரலுக்கு தென்மேற்கில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆலமரத்தின் அருகில் என்னை சமாதி செய்ய வேண்டும்.
சமாதிக் குழியில் என்னை வைத்து காத்திருங்கள். அப்பொழுது மேலே கருடன் மூன்று முறை வட்டமிடும். அதன் நிழல் என் மேல் விழும்போது மண்ணும் மலர்களும் போட்டு எனது சமாதியை மூடிவிடுங்கள்� என்றார். அவர் கூறியபடியே நடந்தது.
அன்றிலிருந்து தம்மை வேண்டி வரும் பக்தர்களுக்கு மண்ணும் தண்ணீரும் திருமருந்தாக கொடுத்து சகல பிணிகளையும் அகற்றி அருள் புரிந்து வருகிறார் சேர்மன் அருணாசலசுவாமி.
இக்கோயிலில் ஆடி, தை அமாவாசை விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் நீராடி சுவாமியை தரிசனம் செய்வார்கள்.
இக்கோயிலுக்கு எதிரே பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலும் உள்ளது. இக்கோயிலில் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா நடைபெறும். இதிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
மேலும், ஏரலில் மிகப் பழமையான பள்ளி வாசல்களும் ஆர்.சி. மற்றும் சி.எஸ்.ஐ கிறிஸ்தவ தேவாலயங்களும் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக