இவ்வாறு போக்குவரத்திற்கு பஞ்சமில்லா இச்சாலையில் வடகால் வாய்க்கால் கரையோரம் பராமரிப்பின்றி உருவான ராட்சத பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது. குறிப்பாக இச்சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிடும்போது இந்த ராட்சத பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். அத்துடன் சாலையோரத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு இருண் மண்டுகிறது. அவ்வேளையில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் சாலையோரத்தில் இறங்கும் போது இந்த ராட்சத பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து பலத்த காயமடைகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவிஷயத்தில் இனியாவது தனிக்கவனம் செலுத்தி ராட்சத பள்ளத்தில் அதில் லாரிகளில் மணல் கொண்டு வந்து கொட்டி சாலையோரத்தை அகலப்படுத்துவதுடன், அங்கு தடுப்புச் சுவர் அல்லது தடுப்பு கம்பிகள் அமைக்க முன்வரவேண்டும். இதேபோல் இந்த சாலையில் ஓரத்தில் கோட்டைகாடு விலக்கு அருகிலும் வயலுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் கரையோரத்திலும் உள்ள மெகா பள்ளம் ஏற்பட்டுள்ள இடத்திலும் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும். இதுவே வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக