சனி, 31 ஆகஸ்ட், 2019

சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழாவில் சப்பர பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு



ஏரல், ஆக.27: சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழாவில் அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி நகர் வலம் வந்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி இரண்டாவது செவ்வாய்க்கிழமை நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு கொடைவிழா நிகழ்ச்சி கடந்த 25ம் தேதி (ஞாயிறு) தொடங்கி நடைபெற்று வந்தது. முக்கிய கொடை விழா நேற்று முன்தினம் (செவ்வாய்) நடந்தது. இதனை முன்னிட்டு  பகல் 12 மணிக்கு அம்மன் சந்தனகாப்பு தரிசனம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். 

சிறப்பு நிகழ்ச்சியாக வில்லிசை, இரவு 11 மணிக்கு முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், கயிறு சுற்றி ஆடுதல், 12 மணிக்கு புஷ்ப அலங்கார தரிசனம் நடந்தது. தொடர்ந்து அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. கொடை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு காலை, மதியம், இரவு பக்கதர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று  (28ம் தேதி) காலை வீதி உலா சென்ற அம்மன் திருக்கோயில் வந்து அமரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஊர்மக்கள் பொங்கலிட்டனர். இதையடுத்து பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை பூஜை நடந்தது. சிறப்பு நிகழ்ச்சியாக இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரி நடந்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...