ஏரல்: ஏரல் தேர்வுநிலை பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் மற்றும் பிளாஸ்டிக்
விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பேரூராட்சி அலுவலகம் முன்பு
விழிப்புணர்வு ஊர்வலத்தை தலைவர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
நிர்வாக அதிகாரி தனசிங், துணைத்தலைவர் மணிவண்ணன், உறுப்பினர் பிச்சையா
முன்னிலை வகித்தனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று காந்திசிலை
அருகே முடிவடைந்தது.
ஊர்வலத்தில் ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கம் துணைத்தலைவர் தாணுலிங்கம்பிள்ளை, நல்லாசிரியர் வில்சன்வெள்ளையா, புள்ளியல் துறை முருகேசன், நகர காங்கிரஸ் தலைவர் பாக்கர் அலி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் கற்பகம், தங்கராஜ், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் அடைக்கலம், எட்வர்டு ஜெபசீலன் மற்றும் அரசு மகளிர், தூய தெரசாள் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக