திங்கள், 8 ஜனவரி, 2018

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா
கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கிறது.
ஏரல்,
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கிறது.
சேர்மன் அருணாசலசாமி கோவில்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் தை மற்றும் ஆடி மாதங்களில் அமாவாசை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோடியேற்ற நிகழ்ச்சியை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் நடத்தி வைத்தார். அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு சேர்மன் அருணாசலசாமி சிறப்பு அலங்காரத்துடன் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தொடர்ந்து 9–ம் திருநாள் வரை தினமும் காலை, இரவில் சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் சப்பரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
தை அமாவாசை
10–ம் திருநாளான வருகிற 16–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தை அமாவாசை திருவிழா நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சுவாமி உருகுபலகை தரிசனம், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக் காட்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது.
11–ம் திருநாளான 17–ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது. மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி நடக்கிறது. இரவு 10.30 மணிக்கு சுவாமி கோவில் மூலஸ்தானம் சேரும் ஆனந்த காட்சி நடக்கிறது.
ஊஞ்சல் சேவை
12–ம் திருநாளான 18–ந்தேதி (வியாழக்கிழமை) தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடல், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவில் ஆலிலை சயனம் மங்கள தரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...