திங்கள், 22 ஜனவரி, 2018

ஏரல் அருகே விவசாயி கொலையில் கூலிப்படையை சேர்ந்தவர் விஏஓவிடம் சரண்





ஏரல், ஜன.22: ஏரல் அருகே விவசாயி கொலையில் கூலிப்படையை சேர்ந்தவர் விஏஓவிடம் சரணடைந்தார்.ஏரல் அருகேயுள்ள அகரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் லெனின்(40). விவசாயியான இவர் மீது போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்தாண்டு அக்.22ம் தேதி இரவு மாரமங்கலம் அருகே தனது வாழைத்தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு நண்பர் கோட்டாளமுத்துவுடன்(38) பைக்கில் வீட்டுக்கு வரும் வழியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 

இதுகுறித்து ஏரல் போலீசார் விசாரணை நடத்தியதில், தொழில் முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சேர்ந்த ஈசாக் மகன் பொன்சீலன் என்ற சிங்கம் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பொன்சீலன் உட்பட 14 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் அக்.24ம்தேதி சுந்தரபாண்டியபுரம் முருகன்(47), தீப்பாச்சி திருமால்ராஜ்(34), தீப்பாச்சி சக்திவேல்(41) ஆகிய 3 பேர் நாங்குநேரி கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும் முள்ளக்காடு தாமஸ்(32), அகரம் பொன்ராஜ்(28), சாயல்குடி சிம்சன், தாளமுத்துநகர் இசக்கிராஜா என்ற இசக்கிமுத்து(44) உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான பொன்சீலன் உட்பட சிலரை தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் தூத்துக்குடி தாளமுத்துநகர் புஷ்பராஜ் மகன் விமல்(34) சிறுத்தொண்டநல்லூர் விஏஓ ராமசாமியிடம் சரணடைந்தார். 
ஏரல் இன்ஸ்பெக்டர் பட்டாணி, எஸ்.ஐ சரவணன் மற்றும் போலீசார் விமலை கைது செய்து விசாரித்ததில் இவர் அகரம் விவசாயி லெனின் கொலையில் கூலிப்படையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விமலை வைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...