ஏரல், ஆக.19: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி ஏரலில் சர்வ கட்சியினர் மற்றும் வியாபாரிகள் மவுன ஊர்வலம் நடத்தினர்.
இதில் பாஜ மாவட்ட அமைப்பு சாரா செயலாளர் முத்துமாலை, முன்னாள் விவசாய அணி அமைப்பாளர் கருப்பசாமி, நகர தலைவர் பரமசிவன், பொது செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் செந்தில், பொருளாளர் சந்திரசேகர், இளைஞரணி தலைவர் சுரேஷ் உட்பட நிர்வாகிகளும், அதிமுக நகர செயலாளர் ஆத்திப்பழம், பேச்சாளர் லில்லிராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் சிவக்குமார், அசோக்குமார் மற்றும் காளிமுத்து, நவநீதன், திமுக சார்பில் வைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிஜி.ரவி, ஏரல் நகர செயலாளர் பார்த்திபன், ஏரல் முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் துணைத்தலைவர் மணிவண்ணன், மாவட்ட பிரதிநிதி செந்தில் ஆறுமுகம், கார்த்தீசன், அமமுக சார்பில் ஏரல் ரமேஷ், சமக துணை செயலாளர் மாரியப்பன், சமூக ஆர்வலர் ஜெயபாலன், ஏரல் வியாபாரிகள் சங்கம் பொருளாளர் வில்சன் வெள்ளையா உட்பட சர்வா கட்சி பிரமுகர்கள் மற்றும் வியாபாரிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக