வியாழன், 13 டிசம்பர், 2012

திருச்சி ஏர்போர்ட், இனி 'திருச்சிராப்பள்ளி


சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டதால் திருச்சி ஏர்போர்ட் பெயர், திருச்சிராப்பள்ளி பன்னாட்டு  விமான நிலையம் என மாற்றப்பட்டுள்ளது.
1963ம் ஆண்டு முதல் சுங்க நடவடிக்கைகளுக்கான விமான நிலையமாக இது  பயன்படுத்தப்படுகிறது.  தஞ்சாவூர், திருவாவூர், புதுக்கோட்டை, கரூர் உட்பட பல மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், வர்த்தகர்கள் இவ்விமான நிலையத்தை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர்.

வாரத்திற்கு, சுமார் 75 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. சிங்கப்பூர், மலேசியா, கொழும்பு, டுபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அவ்விமானங்கள் சென்று வருகின்றன. கடந்த 2009ம் ஆண்டில் ரூ.100 கோடி செலவில் விமான நிலையத்தை மேம்படுத்த முடிவானது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம், திருச்சி விமான நிலையத்தை, சர்வதேச விமானநிலையமாக தரம் உயர்த்தி பிரதமர் அறிவித்தார். எனினும் விரிவாக்க பணிகள் மந்த கதியிலேயே நடந்து வந்தன.

164 ஏக்கர் இராணுவ நிலத்தை பெறுவதில் சிக்கல் தொடர்ந்ததால் 5 வருடங்களுக்கு மேலாக இத்திட்டம் கிடப்பிலேயே இருந்தது.  இந்நிலையில், விமானநிலைய உட்கட்டமைப்பு மேம்படுத்தல் மற்றும் வளர்ச்சி திட்டங்களை விரைவுபடுத்தும் பணிகளை இந்திய விமான நிலைய ஆணைக்குழுமம்  பொறுப்பெடுத்தது. தற்போது, விமான சேவை, அடிப்படை வசதி போன்ற உள்கட்டமைப்பு பணியை தீவிரப்படுத்த விமான நிலைய நிர்வாகத்துடன் சேர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையிலேயே திருச்சி ஏர்போர்ட் எனும் பெயர் திருச்சிராப்பளி சர்வதேச விமான நிலையம் என மாற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...