வியாழன், 21 நவம்பர், 2013

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளை, மஞ்சள் நிற ரேஷன்கார்டுகளை புதுப்பிக்க அறிவுறுத்தல்

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளை, மஞ்சள் நிற ரேஷன்கார்டுகளை புதுப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
காலநீட்டிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் எந்த பொருளும் வேண்டாம் என்பவர்களுக்கு வெள்ளை நிற ரேஷன்கார்டும், இருப்பிட முகவரி ஆதாரத்துக்காக தட்கல் முறையில் மஞ்சள் நிற ரேஷன்கார்டும் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க மாட்டார்கள் என்பதால், தங்கள் கார்டுகளை புதுப்பிக்க ரேஷன் கடைகளுக்கு வருவது இல்லை. இந்த நிலையில் அவர்களது ரேஷன்கார்டுகளை காலநீட்டிப்பு செய்து வழங்குமாறு கோரிக்கைகள் வந்தன.
இதன் அடிப்படையில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற ரேஷன்கார்டுதாரர்கள் தங்கள் ரேஷன்கார்டுகளை இணையதளம் மூலமாக 2013, 2014–ம் ஆண்டுக்கு புதுப்பித்துக் கொள்ளலாம். அதன்பிறகு காலநீட்டிப்பு பதிவு சீட்டு கம்ப்யூட்டரில் அச்சடித்து அளிக்கப்படும்.
சிறப்பு கூட்டம்
இதனை தங்கள் ரேஷன்கார்டுகளில் ஒட்டிக் கொள்ள வேண்டும். இத்தகைய கால நீட்டிப்பு பதிவுச்சீட்டு ஒட்டப்பட்டுள்ள “என்“ ரேஷன்கார்டுகள், புழக்கத்தில் உள்ள ரேஷன்கார்டாக கருதப்படும்.
இணைதளம் வசதியை பயன்படுத்த இயலாத ரேஷன்கார்டுதாரர்கள் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையால் “என்“ கார்டு புதுப்பிக்கும் சிறப்பு குறைதீர்வு கூட்டம் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வருகிற 2–ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வட்ட வழங்கல் அலுவலரை சந்தித்து ரேஷன்கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த வசதிகள் 31–01–2014 வரை செயல்பாட்டில் இருக்கும். இதனை ரேஷன்கார்டுதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...