
ஏரல், செப்.4: ஏரலில் இருந்து சென்னைக்கு 2 அரசு விரைவு பஸ் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏரல் அதிமுக நகர செயலாளர் ஆத்திப்பழம் ஏரலில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது; தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் மூன்றாவது பெரிய வணிக நகரமாக உள்ளது. இங்கிருந்து சென்னைக்கு தினமும் 20 தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. ஒரு இருக்கைக்கு ரூ800 முதல் ரூ1,400 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்கின்றனர். ஒரு தனியார் பஸ்சுக்கு சென்னை செல்வதற்கு ஒரு டிக்கெட் விலை இவ்வளவு தான் என கிடையாது.
சீசனை பொறுத்து டிக்கட் விலையை உயர்த்தி விடுகிறார்கள். அரசு பஸ்சில் செல்லவேண்டும் என்றால் ஒரே ஒரு பஸ் மட்டும் தான் ஏரலில் இருந்து சென்னைக்கு சென்று வருகிறது. அதுவும் மிக பழைய பேருந்தாக உள்ளது. இதனால் ஏரல் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் பயணிகள் நலன் கருதி தமிழக அரசு புதிய நவீன பேருந்துகள் இயக்கிவரும் நிலையில் ஏரலில் இருந்து சென்னை செல்லும் இந்த பழைய பஸ்சை மாற்றி புதிய பஸ் விட வேண்டும். மேலும் ஏரலில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதி கொண்ட மற்றொரு பேருந்தையும் இயக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக