தூத்துக்குடி, செப்.5: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளி) 10 இடங்களில் அம்மா திட்ட முகாம் நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் அந்தந்த வட்டாட்சியர்கள் தலைமையில் நாளை (வெள்ளி) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி, தூத்துக்குடி வட்டத்தில் சேர்வைக்காரன்மடம் கிராமத்திலும், வைகுண்டம் வட்டத்தில் கால்வாய் கிராமத்திலும், திருச்செந்தூர் வட்டத்தில் நங்கைமொழி கிராமத்திலும், சாத்தான்குளம் வட்டத்தில் சாத்தான்குளம் கிராமத்திலும், கோவில்பட்டி வட்டத்தில் பூசாரிபட்டி கிராமத்திலும் முகாம் நடைபெறுகிறது.
விளாத்திகுளம் வட்டத்தில் ராமசந்திராபுரம் கிராமத்திலும், எட்டயபுரம் வட்டத்தில் அருணாசலபுரம் தோழ்மாலைப்பட்டி கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் மேலமருதூர் கிராமத்திலும், கயத்தாறு வட்டத்தில் கடம்பூர் சங்கராப்பேரி கிராமத்திலும், ஏரல் வட்டத்தில் ஆறுமுகமங்கலம் கிராமத்திலும் முகாம் நடைபெறுகிறது. முகாமின்போது, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றுகள், சாதிச் சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளதால் பொதுமக்கள் மனுக்களை அளித்து பயன்பெற
லாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக