திருச்செந்தூர்
குரும்பூர், ஆழ்வார்திருநகரி, உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் நீடித்த மழையால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. உடன்குடி அரசு ஆஸ்பத்திரியின் முன்புள்ள வாடாச்சி மரம் வேரோடு சரிந்து, அங்கு நின்ற டிராக்டரின் மீது விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
திருச்செந்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆத்தூர், ஏரல், நாசரேத், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் லேசான மழை பெய்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக