வியாழன், 31 மார்ச், 2016

ஆறுமுகனேரி, ஆத்தூர், காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை பரவலாக கோடை மழை பெய்தது.



ஆறுமுகனேரி, ஆத்தூர், காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை பரவலாக கோடை மழை பெய்தது.
தென்மாவட்டங்களில் கடந்த இரு வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. பின்னர், காலை 6 மணி வரை மழைதூறல் இருந்தது. காயல்பட்டினம், ஆறுமுகனேரி வடபுறம் வயற்காடு மற்றும் உப்பள பகுதிகளில், பிற பகுதிகளை விட அதிக மழைப்பொழிவு இருந்தது. இதனால், இந்த வட்டாரத்தில் நிலவி வந்த கடும் வெப்பம் தணிந்தது.
இதனிடையே, ஆறுமுகனேரி பகுதியில் உள்ள வயல்களில் மழை நீர் தேங்கியதால் நெல் அறுவடை பாதிக்கப்பட்டது.  உப்பளங்களிலும் தண்ணீர் தேங்கி உப்பளப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், புதன்கிழமை பிற்பகலில் வழக்கம்போல், வெயில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...