புதன், 28 மார்ச், 2018

ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்



ஏரல், மார்ச் 28: சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருப்பணி துவங்குவதற்கான கால்நாட்டு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி 2வது செவ்வாய்க்கிழமை கொடைவிழா நடைபெறும். இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து கோயில் விழா குழவினர் மற்றும் ஊர் மக்கள் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். 

இதையடுத்து முத்துமாலை அம்மன் கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் ஏப்.22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதனை முன்னிட்டு கோயில் கும்பாபிஷேக விழா திருப்பணிகள் தொடங்குவதற்கு முன் கோயில் முன்மண்டபத்தில் கால்நாட்டு விழா நடந்தது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை பூஜை நடந்தது. தொடர்ந்து கோயில் முன் மண்டபத்தில் கால்நாட்டு விழா நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான ஊர்மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருப்பணி கும்பாபிஷேக குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...