ஏரல்,
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சேர்மன் அருணாசல சுவாமி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் தை அமாவாசை திருவிழா 12 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழா நேற்று காலையில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலையில் சண்முக தீர்த்தம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
நேற்று அதிகாலையில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 7 மணிக்கு கோவிலின் முன்பு கொடி ஏற்றம் நிகழ்ச்சி நடந்தது. கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்த பாண்டிய நாடார் கொடி ஏற்றும் நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
1–ம் திருநாள் முதல் 9–ம் திருநாள் வரையிலும் தினமும் காலை, இரவில் சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
தை அமாவாசை
சிகர நிகழ்ச்சியான தை அமாவாசை திருவிழா வருகிற 30–ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசனம், அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோலம், இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது. 31–ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வெள்ளைசாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தல் தாக சாந்தி, இரவு 10.30 மணிக்கு கோவில் மூலஸ்தானம் சேரும் ஆனந்த காட்சி நடக்கிறது.
1–ந் தேதி (சனிக்கிழமை) காலையில் தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடல், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், இரவில் ஆலிலை சயன மங்கள தரிசனம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தபாண்டிய நாடார் செய்து உள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக