நாசரேத், ஏப்.23: போக்குவரத்துக்கு லாயக்கற்ற நாசரேத்-குரங்கணி சாலையை விரைவில் சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாசரேத்-ஏரல் இடையே உள்ள குளத்துக்குடியிருப்பு, கடையனோடை, மாவடிப்பண்ணை, குரங்கணி சாலை பல மாதங்களாக குண்டும் குழியுமாகவும், பெரிய பள்ளங்கள் நிறைந்தும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இந்த வழியாக செல்லும் பஸ்கள், லாரிகள் மற்றும் வாகனங்கள் மிகவும் சிரமப்படுகின்றன. இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில்உள்ள நாசரேத் -ஏரல் சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...
-
Facebook Google+ Mail Text Size Print தூத்துக்குடியில், மத்திய அரசை கண்டித்து ஜமா அத்துல் உலமா சபை சார்பில் கண...
-
Facebook Twitter Mail Text Size Print ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு....
-
Facebook Google+ Mail Text Size Print ஆறுமுகநேரியில் அறிவியல் கண்காட்சி ரெயிலை 18 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்ட...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக