வெள்ளி, 5 ஏப்ரல், 2019

ஏரல்லில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் அறிக்கையின் கதாநாயகன் ராகுல், ஸ்டாலின்






ஏரல், ஏப்.5: நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன், விவசாயக்
கடன் ரத்து என தேர்தல் அறிக்கையின் கதாநாயகனாக ராகுல்காந்தியும், மு.க.ஸ்டாலினும் திகழ்கின்றனர் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஏரலில் தீவிர பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது; 
தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையாக நீட் தேர்வு ரத்து, கல்வி, விவசாய கடன் ரத்து, மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாள் உயர்த்தப்படும் என பலவேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அதேபோல் ராகுல்காந்தி தேர்தல் அறிக்கையில் 5 கோடி குடும்பத்திற்கு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இவர்கள் தேர்தல் அறிக்கையில் கதாநாயகனாக உள்ளார்கள்

தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி நடைபெறுகிறது என்கிறார்கள். இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? பொள்ளாட்சி சம்பவம் ஒன்றே போதும். திமுக வேட்பாளர் கனிமொழி ராஜ்யசபா எம்பியாக இருக்கும் போது வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தை தத்தெடுத்து முன்மாதிரியாக கொண்டு வந்துள்ளார். தூத்துக்குடியில் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து உங்களிடம் ஓட்டு கேட்டு வந்துள்ளார். நீங்கள் அவரை வெற்றி பெறச் செய்தால் தூத்துக்குடி தொகுதியை தத்தெடுத்து குழந்தை போல் பார்த்துக் கொள்வார் என்றார். பிரசாரத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி,  தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, இளைஞரணி மாநில  துணைச் செயலாளர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஜோயல், மாணவரணி மாநில துணைச்  செயலாளர் உமரிசங்கர், முன்னாள் எம்.பிக்கள் ஜெயதுரை, ஜெயசீலன், தலைமை  செயற்குழு உறுப்பினர் பிரம்மசக்தி, பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு  சொர்ணகுமார், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட துணை செயலாளர் வக்கீல்  ஆறுமுகப்பெருமாள், 

வைகுண்டம் ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு பிஜி ரவி,  மேற்கு கொம்பையா, மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் துரை, மாவட்ட  அணிகளின் துணை அமைப்பாளர்கள் ராயப்பன், அனஸ், சுப மாரியப்பன், பிரபாகரன்,  மதிவாணன், பாலமுருகன், நகர செயலாளர்கள் பார்த்திபன், சுடலை, பெருமாள்,  வரதராஜ் ஸ்டாலின், வைகுண்டம் ஒன்றிய துணை செயலாளர் வாழவல்லான்  மகாராஜன், பழையகாயல் கூட்டுறவு சங்கதலைவர் ஜெயசங்கர், ஏரல் பேரூராட்சி  முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர்  காளிதாஸ் பண்ணையார், காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் ராமன், வட்டார  தலைவர் நல்லக்கண்ணு, நகர செயலாளர்கள் பாக்கர் அலி, ஜேக்கப், முன்னாள்  மாவட்ட தலைவர் ஜெயக்குமார், முன்னாள் வட்டார தலைவர் சுயம்புலிங்கம் மற்றும்  சிவகளை பிச்சையா, ஏரல் தாசன் உட்பட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...