வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

ஏரல் அருகே அரசு நிலத்தில் தேக்கு மரங்களை வெட்டி கடத்திய 3 பேர் கைது

ஏரல், : ஏரல் அருகே அரசு நிலத்தில் தேக்கு மரங்களை வெட்டி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறுத்தொண்டநல்லூர் விஏஓ சித்தர்பாபு ஆறுமுகமங்கலம் விஏஓவாக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். 
இவர் ஆறுமுகமங்கலம் செல்லும் போது அங்குள்ள குளக்கரை அருகில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள தேக்குமரங்களை 3 பேர் வெட்டி கடத்த முயன் றதை பார்த்து ஏரல் போலீ சில் புகார் செய்தார்.  
இன்ஸ்பெக்டர் ராம ராஜன், எஸ்ஐ முத்துலட்சுமி ஆகியோர் விரைந்து சென்று தேக்கு மரம் கடத் திய ஆறுமுகமங்கலத் தை சேர்ந்த முருகன் (46), சுப்பிரமணியன் (41), பட்டாண்டிவிளை நடராஜன் (38) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். ரூ 3 லட்சம் மதிப்புள்ள தேக்கு மரங் களையும் கைப்பற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...