ஏரல், : ஏரல் அருகே ஆழ்துளைகிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுவதை கண்டித்து தாமிரபரணி வடகால், தென்கால் பாசன பாதுகாப்பு போராட்டக்குழு சார்பில் ஏரலில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
தாமிரபரணி வடகால், தென்கால் பாசன சங்க போராட்டக்குழு கூட்டம் ஏரலில் நடந்தது. உமரிக்காடு சந்திரசேகரன் தலைமை வகித்தார். பாசன சங்க போராட்டக்குழு தலைவர் கந்தசாமி விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
இதில், ஏரலில் இருந்து முக்காணி செல்லும் மெயின்ரோட்டில் வாழவல்லான் மற்றும் உமரிக்காடு பகுதியில் கடந்த ஒரு மாதமாக ஆழ்துளை கிணறு அமைத்து லாரிகள் மூலம் தண்ணீர் வியாபாரம் நடக்கிறது. இதனால் இப்பகுதி நிலத்தடி தண்ணீர் உப்பாக மாறிவருகிறது. நிலத்தடி நீரை பயன்படுத்தி பயிர் செய்துள்ள வாழைகளை காப்பாற்ற விவசாயிகள் போராடிவரும் நிலையில் 300க்கு மேற்பட்ட நடை மூலம் 1 டன் 30 ரூபாய். 1 லாரி (18 டன்) ரூ.540க்கு என தண்ணீர் விற்கப்படுகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நியாயம் கிடைக்காததால் நாளை (10ம் தேதி) மாலை 4 மணிக்கு ஏரல் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. விவசாய சங்கத்தை சேர்ந்த வாழவல்லான் சின்னத்துரை, மார்க்சிஸ்ட் நகர செயலாளர் பெஸ்டி, முக்காணி இசக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக