தூத்துக்குடி, நெல்லை ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் அறவே இல்லை நிதியில்லை என ரயில்வே நிர்வாகம் கைவிரிப்புபதிவு செய்த நேரம்:2012-11-02 10:54:12
தூத்துக்குடி,: தென்னக ரயில்வேயை பொறுத்தவரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் கோடிக்கணக்கில் வருமானத்தை கொட்டி தருகின்றன. ஆனால் சாதாரண ரயில்கள் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் தென்னக ரயில்வேக்கு வருவாயை அள்ளி தரும் அட்சய பாத்திரமாகவே கருதப்படுகின்றன. உயர்வகுப்பு மற்றும் தூங்கும் வசதியுடன் கூடிய இரண் டாம் வகுப்புகளால் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான வருமானம் ரயில்வேக்கு கிடைக்கிறது. இதுபோக தட்கல் டிக்கெட்டுகள் மூலம் ரயில்வே இருமடங்கு லாபம் ஈட்டுகிறது. ஆனால் இவற்றுக்கு மாறாக சாதாரண ரயில்கள் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன.
காலமாற்றத்திற்கு ஏற்ப பஸ்களில் கூட குறைந்தபட்ச கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பயணிகள் ரயிலில் 90ம் வருடத்திய கட்டணமே இன்று வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. அரசு பஸ்களில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு ரூ.9 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு இருமடங்கு தொலைவுள்ள பேட்டைக்கு பயணிகள் ரயிலில் செல்ல ரூ.2 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ரூ.3 கட்டணத்தில் சேரன்மகாதேவிக்கும், ரூ.5 செலுத்தி அம்பைக்கும் செல்லலாம் என்பதால் பயணிகள் ரயிலில் கூட்டம் அலை மோதி வருகிறது. ஆனால் இக்கட்டணங்களால் ரயில்வே துறைக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருவதாக ஊழியர்கள் கூறி வருகின்றனர். நெல்லை சந்திப்பு உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை சீர்செய்ய தென்னக ரயில்வேக்கு கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. நெல்லை ரயில் நிலையத்தில் 4, 5வது பிளாட் பார்ம் களில் எந்த வசதியும் கிடையாது. கூடுதல் ரயில்களை இயக்கவும் வசதிகள் இல்லை. புதிய கட்டிடம் அருகே நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கிய நிலை யிலேயே இருக்கிறது. தென்மாவட்டங்களில் மின்மய மாக்கும் பணிகளும் அவ்வப்போது நிதி நெருக்கடியை காரணம் காட்டி நிறுத்தப்பட்டு வருகின்றன. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கடந்த 9 மாதமாக பிளாட்பார்ம் டிக் கெட் இயந்திரத்தை சீரமைக்க கூட நிதியில்லை என காரணம் காட்டி ரயில் வே நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது. திருச்செந்தூர் மார்க்கத்தில் பாளை உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில் குடி தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் சுத்த மாக இல்லை. தூத்துக்குடி ரயில் நிலையத்திலும் பிளாட்பார்ம் டிக்கெட் இயந்திரம் பழுதாகி கிடக்கிறது. அங் குள்ள 3வது பிளாட்பார்ம் காட்சி பொருளாக உள்ளது. இவற்றை சரி செய்ய தென்னக ரயில்வே போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என ரயில்வே ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சமீபத்தில் புதிய ரயில் வே அமைச்சராக பொறுப்பேற்ற பவன்குமார் பன்சால் சேவைகளை மேம்படுத்தி ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார். வெறும் கட்டண உயர்வுகளை மட்டும் மேற்கொள்ளாமல் தென் மாவட்ட ரயில் நிலைய பிளாட்பார்ம்களில் அடிப்படை வசதி களை அதிகரிக்க முன்வரவேண்டும். வினோத கட்டணங்கள் ரயில்வே துறையின் கட்டண விகிதங்கள் எப்போதுமே வினோதமாக நிர்ணயிக்கப்படும். பயணிகளை வரவேற்க செல்லும் ஒருவருக்கு பிளாட்பார்ம் கட்டணமாக ரூ.5 என நிர்ணயிக்கும் ரயில்வே துறை, ரயில்களில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணம் ரூ.2 என நிர்ணயம் செய்திருப்பது வேடிக்கையானது. ரயில்வேயின் இந்த காமெடி கட்டண விதிப்புகளை பயன்படுத்தி கொள்ளும் சில விபரம் தெரிந்த பயணிகள் பிளாட்பார்ம் டிக்கெட் எடுப்பதற்கு பதிலாக, அந்த சமயத்தில் வரும் பயணிகள் ரயிலுக்கான குறைந்தபட்ச டிக்கெட்டுகளை பெற்று ஸ்டேஷனுக்குள் நுழைந்து விடுகின்றனர். |
வெள்ளி, 2 நவம்பர், 2012
தூத்துக்குடி, நெல்லை ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் அறவே இல்லை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...
-
Facebook Google+ Mail Text Size Print தூத்துக்குடியில், மத்திய அரசை கண்டித்து ஜமா அத்துல் உலமா சபை சார்பில் கண...
-
Facebook Twitter Mail Text Size Print ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு....
-
Facebook Google+ Mail Text Size Print ஆறுமுகநேரியில் அறிவியல் கண்காட்சி ரெயிலை 18 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக