தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) குறுகிய கால இலவச பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் எய்தும் குறுகிய கால இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் பெற்றுத்தர வாய்ப்பு உள்ளது. பயிற்சி காலம் பத்து மாதங்கள் ஆகும். எலக்ட்ரீசியன், டர்னர், பற்றவைப்பாளர் ஆகிய பிரிவுகளில் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ளும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் போக்குவரத்து கட்டணமாக தினமும் ரூ.100 என்ற வீதத்தில் வழங்கப்படும்.
பயிற்சி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்ளும் பயிற்சியாளர்கள் 8 ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்களும் கலந்துகொள்ளலாம். பயிற்சிக்கு வரும் போது அசல் கல்வி ஆவணங்களுடன் வர வேண்டும்.
8ஆம் வகுப்பு முடித்தவர்கள் 8 ஆம் வகுப்பு சான்றிதழ், அதற்கு மேல் படித்தவர்கள் மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச் சான்றிதழ், 5 மார்பளவு புகைப்படம் மற்றும் நகல்களுடனும் நேரில் வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 0461 - 2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக