பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் நெற்பயிருக்கு பிரீமியம் செலுத்த நாளை கடைசி நாள்
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் நெற்பயிருக்கு பிரீமியம் செலுத்த நாளை (வியாழக்கிழமை) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி,
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் நெற்பயிருக்கு பிரீமியம் செலுத்த நாளை (வியாழக்கிழமை) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
காப்பீடு திட்டம்
புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போதும், பூச்சி நோய் தாக்குதலினால் பயிருக்கு சேதம் ஏற்படும் போதும் பயிர்களுக்கு ஏற்படும் மகசூல் குறைவுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2017–ம் ஆண்டுக்கு பிசான பருவத்துக்கான நெற்பயிருக்கு காப்பீடு தொகை செலுத்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கடன் பெற்ற விவசாயிகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் ஒரே விதமான பயிர் காப்பீடு தொகை மற்றும் சேர்க்கைக்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நாளை கடைசிநாள்
அதன்படி நெற்பயிருக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு கட்டணமாக (பிரீமியம்) ஒரு ஏக்கருக்கு ரூ.345 செலுத்த வேண்டும். இந்த பிரீமியம் தொகை செலுத்துவதற்கு நாளை (வியாழக்கிழமை) கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் பிசான பருவ நெற்பயிருக்கு உரிய காப்பீடு கட்டணத்தை நாளைக்குள் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையத்திலோ, தேசிய மயமாக்கப்பட்ட வணிக வங்கிகளிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ செலுத்தி பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக