ஏரல்: தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகளை நேரில் சென்று கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேர்கானல் நடத்தி நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். அதன்படி ஏரல் நகர திமுக இளைஞரணி நிர்வாகிகள் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நகர இளைஞரணி அமைப்பாளராக முருகராஜா, துணை அமைப்பாளராக முத்துமாரியப்பன், முத்துமாலை ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இளைஞரணி புதிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராஜ்மோகன் செல்வின், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய திமுக செயலாளர் மெய்யழகன், ஏரல் நகர செயலாளர் பார்த்திபன் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக