ஆசிரியையாக நடித்த பெண் கைவரிசை
ஏரல், மார்ச் 23&
ஏரல் கோயிலில் குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து பெண்ணிடம் நகைபறித்த சம்பவம் நடந்துள்ளது. இதையொட்டி ஆசிரியையாக நடித்த பெண்ணை தேடிவருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள நொச்சிக்குளம் வடக்குத்தெருவைச்சேர்ந்த செல்லையா மனைவி சரஸ்வதி(50). இவர் தனது மகள் பிரேமா உள்பட 5 பெண்களுடன் ஏரல் சேர்மன்கோயிலுக்கு அமாவாசையையொட்டி சாமிகும்பிட வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சாமி கும்பிட்டுவிட்டு அனைவரும் கோயில் வளாகத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இவர்களிடம் வந்தார். தான் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டீச்சராக வேலைபார்ப்பதாகவும். கணவர் பிரிந்து சென்றுவிட்டார் என்றும் தனது சோகக் கதையை எடுத்து விட்டார். சரஸ்வதி மற்றும் அவருடன் வந்த பெண்கள் அந்த பெண் விட்ட புருடாவை நம்பிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து நள்ளிரவு நேரம் அந்த பெண் கொண்டுவந்த கூல் டிரிங்ஸ்சை ஒரு கிளாசில் ஊற்றி கொடுத்தார். சரஸ்வதியும் அவருடன் வந்த ஒரு பெண்ணும் கூல்டிரிங்ஸ்சை வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் அப்படி யே மயங்கி சரிந்தனர். இதைபார்த்த மற்றபெண்கள் தூக்கம் வந்ததால் படுத்துவிட்டார்கள் என கருதி அவர்களும் படுத்துக்கொண்டனர். கூடவே அந்தபெண்ணும் அவர்களுடன் தங்கினார்.
இந்நிலையில் நேற்று காலை கண்விழித்து பார்த்தபோது, தனது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை காணாது சரஸ்வதி பதறினார். கீழே எங்கேயாவது விழுந்து கிடக்கிறதா என தேடிபார்த்தார். ஆனால் செயின் கிடைக்காததால் தங்களு டன் தங்கிய பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையில் அந்த பெண் இரவோடு இரவாக அங்கிருந்து கம்பி நீட்டிவிட்டார்.
இதுகுறித்து ஏரல் போலீசில் புகார் செய்யப்பட்டது. எஸ்ஐ சுந்தரமகாலிங்கம் விசாரித்து வருகிறார்.
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பெண்ணிடம் நகை ‘அபேஸ்’
ஏரல் கோயிலில் பரபரப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக