திங்கள், 19 மார்ச், 2012

ஏரலில் பள்ளி அருகே ஆபத்தான மின்கம்பம்

ஏரல்: ஏரல் பஸ் நிலையம் அருகில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகள் சைக்கிள்களை நிறுத்த பள்ளி வளாகத்தில் இடவசதி இல்லாததால் வெளியில் உள்ள கேட் பகுதியிலும், எதிர்புறம் ரோட்டோர பகுதிகளிலும் நிறுத்தி விட்டு பூட்டிச் செல்கின்றனர்.  
மாணவிகள் சைக்கிள் நிறுத்தும் பகுதியிலுள்ள மின்கம்பத்தில் கான்கீரிட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. பலத்த காற்று வீசினால் மின்கம்பம் ஒடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் அருகில் வீடுகளும் உள்ளன.
எனவே விபத்து ஏற்படும் முன் பழுதான மின்கம்பத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள், தெருமக்கள் எதிர்பார்க்கின்றனர்.  இதேபோல் ஏரல் அருகே திருவழுதிநாடார்விளை காலனி கீழத்தெருவில் உள்ள கடைசி மின்கம்பத்தின் அடிப்பகுதி முழுவதுமாக அரிக்கப்பட்டு கான்கீரிட் பெயர்ந்து, மின்கம்பம் அருகில் உள்ள வீட்டு மீது விழும் நிலையில் சாய்ந்து நிற்கிறது. இந்த மின்கம்பத்தையும் மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...