வியாழன், 9 ஜூன், 2016

ஏரல் அருகே குரங்கணி முத்து மாலை அம்மன் கோயிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கும்பா பிஷேக விழா

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் இன்று (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் குவிந்தனர்.

முத்துமாலை அம்மன் கோவில்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், மாலையில் முதலாம் கால யாகசாலை பூஜை நடந்தது.

2-ம் நாளான நேற்று காலையில் 2-ம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. மாலையில் 3-ம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு தங்க திருமேனி கவசம் அணிவிக்கப்பட்டது. தங்கமுக அலங்காரத்துடன் காட்சி அளித்த அம்மனை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

இன்று கும்பாபிஷேகம்

விழாவின் சிகர நாளான இன்று (புதன்கிழமை) காலை 8.45 மணிக்கு 4-ம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, கடம் புறப்படுதல் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு கோவில் விமானத்துக்கும், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.

மாலை 6 மணிக்கு ‘அம்பாள் மகிமை‘ என்ற தலைப்பில் சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு 1,008 திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு ‘கம்பராமாயண பாலகாண்டம்‘ என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 11 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

கும்பாபிஷேக விழாவையொட்டி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கியிருந்து வழிபடுகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாதவன், ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ச.அஜித், உதவி ஆணையர் மொ.அன்னக்கொடி, குரங்கணி 60 பங்கு நாடார்கள், கும்பாபிஷேக விழா கமிட்டியினர், ஊர் மக்கள் செய்துள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...