வியாழன், 9 ஜூன், 2016

ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் கோவிலில் சுவாமி– அம்பாள் திருக்கல்யாணம்

T
ஏரல்,
ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் சங்கர ஈசுவரர் கோவிலில் நேற்று முன்தினம் காலையில் வருசாபிஷேக விழா நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் முத்துமாலை அம்மன் கோவிலில் உள்ள நாராயணசாமி சன்னதியில் இருந்து பக்தர்கள் சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக சங்கர ஈசுவரர் கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து சங்கர ஈசுவரர்– கோமதி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...