எதிரொலி ஏரல் ஆற்றுப்பாலம் சீரமைப்பு பணி தொடங்கியது
கருத்துகள்
ஏரல்: தினகரன் செய்தி எதிரொலியாக ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஏரல் ஆற்றுப்பாலம் வடகரை ஓரத்தின் கீழ்பகுதியில் அரிப்பு ஏற் பட்டு பாலத்தின் அடியில் பெரிய உடைப்பு ஏற்பட்டது. இதன் வழியாக வாகனங்கள் சென்றால் விபத்து ஏற்படும் என கருதிய போலீசார் அங்கு எச்சரிக்கை பலகை வைத் தனர்.
இதனால் வாகனங்கள் ஒதுங்கி செல்லும் போது எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட முடி யாமல் சிரமம் உருவானது. உடைப்பு ஏற்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த மாதம் ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயிலில் நடந்த தை அமாவாசை திருவிழாவிற்கு பக்தர்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்ததால் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது நெடுஞ்சாலைதுறையினர் பாலத்தில் உடைப்பு ஏற்பட்ட இடத் தில் கான்கீரிட் போட்டு சீரமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர். இதை ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக