சாயர்புரம் பகுதியில் குரங்குகள் அட்டகாசம்
கருத்துகள்
பதிவு செய்த நேரம்:2012-07-12 11:40:48
தூத்துக்குடி, : சாயர்புரம் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சாயர்புரம் மற்றும் செந்தியம்பலம், நடுவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரு குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. மலைப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த இக்குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து உணவுப்பொருட்களை எடுத்துச்சென்று விடுகின்றன. கடைகளின் மேல்பகுதிக்கு சென்று விற்பனைக்காக வைத்துள்ள பழம் உள்ளிட்ட பொருட்களையும் நாசம் செய்கின்றன.
குழந்தைகள் கையில் வைத்திருக்கும் தின்பண்டங்களை தட்டிப்பறித்து செல்வதுடன், அவர்கள் எதிர்பாராத நேரத்தில் பாய்ந்து பயமுறுத்துவதால் அசம்பாவிதம் நேரிடும் வாய்ப்புள்ளது. இவற்றை விரட்ட முயல்பவர்கள் மீது கோரை பற்களை காட்டி கடிக்க பாய்கின்றன.
இந்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்து வல்லநாடு மலைப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக