ஏரல், : தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்கும் திட்டத்தால் சாயர்புரம் அருகே உள்ள பேய்க்குளம் வறண்டு உடைமர காடாக காட்சியளிக்கிறது. இதனால் 4 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாயர்புரம் அருகே உள்ள பேய்க்குளத்திற்கு ஸ்ரீவைகுண்டம் அணை வடகால்வாய்க்கால் வழியாக தண்ணீர் வரும். இக்குளத்தில் வருடம் முழுவதும் தண்ணீர் இருப்பதால் சுற்றியுள்ள கிராமங்கள் பசுமையாக காணப்படும்.
இக்குளத்தை நம்பி சாயர்புரம், நடுவைக்குறிச்சி, நந்தகோபாலபுரம், புளியநகர், சிவத்தையாபுரம், பேய்க்குளம், இருவப்பபுரம், சேர்வைக்காரன்மடம், தங்கம்மாள்புரம், போடம்மாள்புரம், கூட்டாம்புளி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், வாழைகளை பயிர் செய்து வருகின்றனர்.
கோடைகாலத்தில் விவசாய சங்கங்கள் மூலம் குளத்திற்கு தண்ணீர் வரும் பாசன கால்வாயில் தூர்வாருதல், மடைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால் இப்பகுதியில் நெல் இருபோகம் விளைந்தது. விவசாயம் செழித்திருந்த இப்பகுதியில் விவசாயிகளுக்கு இடி விழுந்தது போல ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தால் குளத்திற்கு முறையாக தண்ணீர் வரவில்லை.
மழைக்காலத்தில் வடகால் வாய்க்கால் மூலம் 3 மாதங்கள் கூட குளத்திற்கு தண்ணீர் வருவது கிடையாது.
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கடல்போல காட்சி அளிக்கும் இந்த குளம் வறண்டு மணல் மேடாகவும் உடைமரங்கள் வளர்ந்து காடாகவும் காட்சி அளிக்கிறது. இருபோகம் விளைந்த இப்பகுதியில் ஒரு போகம் நெல் விளைவிக்கவே விவசாயிகள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது தண்ணீர் இல்லாததால் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைகள் கருகி சேதமடைந்துள்ளன.
இதனால் எஞ்சியுள்ள வாழைகளை காப்பாற்ற விவசாயிகள் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து வருகின்றனர். குறு விவசாயிகள் பணம் இல்லாததால் வாழைகளை அப்படியே விட்டுவிட்டனர். குளத்தில் தண்ணீர் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து இப்பகுதியில் தண்ணீர் உப்புநீராக மாறிவருகிறது. இதனால் குடிநீர் பிரச்னையும் தலைவிரித்தாடுகிறது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருவதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
இதுகுறித்து பேய்க்குளம் நிலச்சுவான்தார்கள் அபிவிருத்தி சங்க பொருளாளர் குணசேகரன் கூறுகையில், “நதிநீர் இணைப்பு திட்டம் என்ற பெயரில் கன்னடியன் அணையில் ஆற்றின் குறுக்கே தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டதால் பேய்குளத்திற்கு தண்ணீர் வருவது தடைபட்டது. இதனால் ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் பாசன பகுதிகளின் 25 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்டு ள்ளது. தடுப்பு சுவரை அகற்ற இருபாசன விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் எந்த பயனும் இல்லை.
இந்தநிலையில் 23 எம்ஜிடி திட்டம் என்ற பெயரில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல புதிய திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வாழ்வுரிமையை பாதிக்கும் வகையில் ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து நேரிடையாக ராட்சத மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சி எடுத்துச் செல்லப்படுகிறது. மணிமுத்தாறு, பாபநாசம் அணைகள் விவசாயத்திற்காக விவசாயிளின் பங்களிப்போடு கட்டப்பட்டதாகும். ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஊரக வளர்ச்சிதுறை தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு விற்க குடிநீர் வடிகால் வாரியத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் பாசன பகுதியில் 4 லட்சம் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு வரும் தண்ணீரை தடுக்கும் வகையில் வல்லநாடு பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்த வேண்டும். விவசாயத்தை பாதிக்ககூடிய இத்திட்டத்தை ரத்து செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அரசு காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல்மேடாக மாறியுள்ள பேய்க்குளத்தை தூர்வாரி அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக