ஏரல், : ஏரல் தெற்கு முகமதியார் தெருவை சேர்ந்த பொன்னுமுத்து மனைவி முத்துக்கனி. கணவர் இறந்து விட்டதால் முத்துக்கனி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
அவருக்கு துணையாக சென்னையில் வசிக்கும் மகள் தனலட்சுமி அவரது குழந்தை மொனிகாவை ஏரலுக்கு அனுப்பி வைத்தார். மொனிகா அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை மொனிகா பள்ளிக்கு புறப்பட்டு கொண்டிருந்தார்.
அப்போது மாடியில் ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டது. அவர் சென்று பார்த்த போது 2 பேர் கையில் பெரிய சாக்கு பைகளுடன் தப்பி சென்றனர்.
மாடியில் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பித்தளை பாத்திரங்களை அவர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ஏரல் சப்-இன்ஸ்பெக்டர் அருள்சாம்ராஜ் வழக்குப்பதிவு செய்து 2 பேரை தேடி வருகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக