ஏரல், : ஏரல் அரசு மகளிர் பள்ளி 10ம் வகுப்பில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு டி.வி.எஸ். அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா நடந்தது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், அனைத்து வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் தாணுலிங்கம்பிள்ளை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மோகன் முன்னிலை வகித்தனர். சேர்மன் அருணாசலசுவாமி கோயில் பரம்பரை அக்த்தார் கருத்தப்பாண்டிய நாடார் வரவேற்றார்.
டி.வி.எஸ் அறக்கட்டளை சார்பில் பொறுப்பாளர் முருகன் பள்ளி தலைமை ஆசிரியர் திருமலைக்கு கேடயம் வழங்கினார். ஏரல் அரிமா சங்க செயலாளர் சண்முகமுருகன் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். அரிமா சங்க பொருளாளர் அருணாச்சலம், வியாபாரிகள் சங்கம் செயலாளர் தர்மராஜ், ஒய்வு பெற்ற ஆசிரியர் சங்கர பொன்னம்பழம், நகர காங்கிரஸ் தலைவர் பாக்கர் அலி, முன்னாள் தலைமை ஆசிரியர் ராபர்ட்சன், நல்லாசிரியர் வில்சன் வெள்ளையா உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியை பியூலா நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக