வியாழன், 1 அக்டோபர், 2015

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை தூத்துக்குடியில் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மழை நீடித்து வருகிறது. தூத்துக்குடியில் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின.

தொடர் மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை தொடர்ந்தது. நேற்று காலை தூத்துக்குடி நகர் பகுதியில் பலத்த மழை பெய்தது.

இதனால் பாளையங்கோட்டை ரோடு, மேற்கு காட்டன் ரோடு, அரசு ஆஸ்பத்திரி பகுதி, ரவுண்டானா பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.

வாகனங்கள் சாலைகளில் மெதுவாக ஊர்ந்து சென்றன. ஏற்கனவே பெய்த மழையால் தூத்துக்குடியில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் நேற்று பெய்த பலத்த மழையால் உப்பளங்கள் முழுவதும் தண்ணீரால் மூழ்கி காட்சி அளித்தன.

மழை அளவு

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:–

தூத்துக்குடி –6.2, கோவில்பட்டி –4, கடம்பூர் –1, கயத்தாறு –2, கழுகுமலை –7, திருசெந்தூர் –20, குலசேகரன்பட்டினம் –18, விளாத்திகுளம் –3, காடல்குடி –14, வைப்பாறு –43, ஓட்டப்பிடாரம் –1, கீழஅரசரடி –1, ஸ்ரீவைகுண்டம் –8, சாத்தான்குளம் –3.2, எட்டயபுரம் –1.

இதில் வைப்பாறு பகுதியில் அதிகபட்சமாக 43 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...