திங்கள், 23 ஏப்ரல், 2018

ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா



ஏரல், ஏப்.23: சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 19ம்தேதி தொடங்கி நடந்து வந்தது. கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு மங்கள இசை, தேவார திருமுறை பாராயணம் நடந்தது. தொடர்ந்து 6ம் கால யாக பூஜை மற்றும் பிம்பசுத்தி, நாடி ஸ்ந்தானம், துர்கா மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. 5.30 மணிக்கு யாத்ராதானம், கடம்புறப்படுதல், தொடர்ந்து விமான கோபுர கும்பாபிஷேகம் மற்றும் முத்துமாலை அம்மன், சந்தனமாரி அம்மன், தட்டப்பாறை அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேம் நடந்தது. 

தொடர்ந்து தீபாராதனை, மகாபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் மஹேஸ்வர பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மாலையில் திருவிளக்கு பூஜையும், இரவு 11 மணிக்கு அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி நகர் வலம் வருதல் நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு காலை மற்றும் இரவு சிற்றுண்டியும், மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. ஏற்பாடுகளை முத்துமாலை அம்மன் கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேக விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...