ஏப். 27: காஷ்மீரில் சிறுமி ஆஷிபா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆத்தூரில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆத்தூர்கிளை சார்பில் நடந்த இந்த கண்டன ஆரப்பாட்டத்துக்கு நகரச் செயலாளர் அன்வர்பாஷா தலைமை வகித்தார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது, மாவட்ட துணைச் செயலாளர் முகமது நஜீப் சாதிக் பாஷா, பொருளாளர் நவாஸ், இளைஞரணிச் செயலாளர் முகமது ராபிக், ராஸிக் முஸம்மில், ஒன்றியச் செயலாளர்கள் ஆழ்வை ராசுகுட்டி, கருங்குளம் முகமதுஅலி, திருச்செந்தூர் மீராசாகிபு, கிளை அமைப்பாளர் ராபீக், காயல்பட்டினம் நகரச் செயலாளர் மகதும், பொருளாளர் மீரான் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்றோர், சிறுமி ஆஷிபாவின் படுகொலைக்கு நீதி விசாரணை நடத்தக்கோரியும், குற்றவாளிகளை தூக்கிலிடக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநில துணைச் செயலாளர் செய்யது அலி, மாவட்டச் செயலாளர் ஜாஹீர் உசேன், ஆத்தூர் எஸ்.டி.பி.ஐ. செயலாளர் மஜீத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆத்தூர் கிளை பொருளாளர் இப்ராஹிம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆத்தூர் கிளை நிர்வாகிகளான அல்தாப், சித்திக், நவாஸ், ரியாஸ், அரபாத், ஹாரிஸ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக