வியாழன், 19 ஏப்ரல், 2018

பெருங்குளத்திலும் தென்திருப்பேரையிலும் அம்மா திட்ட முகாம்


தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

அம்மா திட்ட முகாம் 

அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அம்மா திட்ட முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடக்கிறது. இந்த வாரத்துக்கான முகாம் இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா மேலத்தட்டப்பாறையிலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா பெருங்குளத்திலும், திருச்செந்தூர் தாலுகா தென்திருப்பேரையிலும், சாத்தான்குளம் தாலுகா பிடானேரியிலும், கோவில்பட்டி தாலுகா இடைசெவல் பகுதி–2 கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகா புதூர் குளக்கட்டாக்குறிச்சியிலும், எட்டயபுரம் தாலுகா ஆத்திக்கிணறு மற்றும் தி.சண்முகபுரம் கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகா சில்லாங்குளத்திலும், கயத்தாறு தாலுகா செட்டிகுறிச்சியிலும் நடக்கிறது.

உடனடி தீர்வு 

இந்த முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு – இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...