மேலும் இந்த ரோட்டில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வாகனங்குளும் தட்டுதடுமாறி சென்று வருகின்றனர். மேலும் இந்த ரோட்டின் ஓரத்தில் 25க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இந்த செங்கல் சூளைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்களும் இந்த மோசமான ரோட்டில் சிரமப்பட்டு வேலைக்கு சென்று வருகின்றனர்.
இதேபோல் இந்த ரோட்டின் வடபுறம் உள்ள விவசாய நிலத்தில் அதிக அளவு வாழை விவசாயம் நடந்து வருவதால் விவசாயிகளும் இந்த ரோட்டை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். எனவே ஏரல்-முக்காணி ரோடு முக்கிய ரோடாக இருப்பதால் இதனை உடனடியாக சீரமைத்திட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக