வியாழன், 26 மே, 2016

ஏரல் அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி மாணவி ஹஜிஸ்தா சர்வத்பேகம் 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.

ஏரல், : ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 107 மாணவிகள், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 100 சதவீத தேர்ச்சி ஆகும். மாணவி ஹஜிஸ்தா சர்வத்பேகம் 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 96, ஆங்கிலம் 96, கணக்கு 95, அறிவியல் 99, சமூக அறிவியல் 100. மாணவி ஆயிஷா சப்ரின் 485 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2ம் இடமும், ராஜலெட்சுமி 475 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடமும் பெற்றுள்ளனர். 15 மாணவிகள் 450க்கும் மேற்பட்ட மதிப்பெண்களும், 46 மாணவிகள் 400க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியை காளியம்மாள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மோகன், ஏரல் சேர்மன் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார், பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் தசரதபாண்டியன், பொருளாளர் வில்சன் வெள்ளையா, முஸ்லிம் வணிகர் நலச்சங்க தலைவர் பாக்கர் அலி, ஸ்ரீவைகுண்ம் யூனியன் கவுன்சிலர் ராயப்பன், டிவிஎஸ் அறக்கட்டளை ஆலோசகர் முருகன், அரிமா சங்க தலைவர் அருணாசலம், முன்னாள் பேரூராட்சி தலைவர் எட்வர்ட் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...