தூத்துக்குடி,: தூத்துக்குடி மாவட்டத்தில் 37 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை 292 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் மாநகராட்சி பள்ளிகள் 2, அரசு உதவிபெறும் பள்ளிகள் 41, சுயநிதி பள்ளிகள் 5, மெட்ரிக் பள்ளிகள் 66 ஆகியவை 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.கடந்தாண்டு 23 சுயநிதி பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு 5 பள்ளிகளே முழு தேர்ச்சி நிலையை எட்டியுள்ளன. அரசு உதவிபெறும் பள்ளிகளின் தேர்ச்சியும் 24ல் இருந்து 41 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல 37 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. மொத்தம் 292 பள்ளிகளில் 149 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் தருவைகுளம் அரசு பள்ளி, பிள்ளையார்நத்தம், வேப்பலோடை, அரியநாயகிபுரம், எப்போதும்வென்றான், காடல்குடி, கோடாங்கிபட்டி, கொல்லங்கிணறு, பரிவல்லிக்கோட்டை, வெம்பூர், படர்ந்தபுளி, விஜயாபுரி, சிதம்பரம்பட்டி, எல்எம்காலனி- கோவில்பட்டி, மேல்மாந்தை, வேடநத்தம், சென்னிமரரெட்டிபட்டி, கோவில்பட்டி-காந்திநகர், திருமங்கலகுறிச்சி உள்ளிட்ட அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் ஆறுமுகநேரி, படுக்கப்பத்து, கீழபூவாணி, ராமானுஜம்புதூர், ஏரல், முக்காணி, கொம்மடிக்கோட்டை, நடுநாலுமூலைகிணறு, கால்வாய், காசிலிங்கபுரம், அனவரதநல்லூர், சாமுவேல்புரம், சுண்டன்கோட்டை, பொட்டல்காடு, பன்னம்பாறை, புதுக்குளம், கொம்பன்குளம், தேரிக்குடியிருப்பு அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன. சாதனை படைத்த அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக