குரங்கணி, மாவடிப்பண்ணை பகுதியில் அட்டகாசம் செய்த 20 குரங்குகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர்.
தென்திருப்பேரை,
குரங்கணி, மாவடிப்பண்ணை பகுதியில் அட்டகாசம் செய்த 20 குரங்குகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர்.
அட்டகாசம் செய்யும் குரங்குகள்
தூத்துக்குடி மாவட்டம் குரங்கணி, மாவடிப்பண்ணை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான குரங்குகள் காணப்படுகின்றன. அவை வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதுடன், உணவுப் பொருட்களையும் தூக்கிச் சென்றுவிடுகின்றன. சிறுவர்கள் உள்பட பலரை குரங்குகள் கடித்து காயப்படுத்தி உள்ளன.
மாந்தோப்பு, தென்னந்தோப்புகளிலும் குரங்குகள் புகுந்து, மாங்காய், இளநீரை பறித்து வீசி அட்டகாசம் செய்கின்றன. இதனால் விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
20 குரங்குகள் பிடிபட்டன
எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து திருச்செந்தூர் வனச்சரகர் லோகசுந்தரநாதன், வன காப்பாளர்கள் காளிராஜன், ரத்தினம் உள்ளிட்டவர்கள் குரங்குகளை பிடிப்பதற்காக மாவடிப்பண்ணையில் நேற்று 3 இடங்களில் கூண்டுகளை வைத்து இருந்தனர்.
கூண்டுகளுக்குள் பொரிகடலை போட்டு இருந்தனர். அதனை தின்பதற்காக குரங்குகள் வந்தபோது, கயிற்றின் மூலம் கூண்டின் கதவுகளை மூடி விட்டனர். முதற்கட்டமாக 20 குரங்குகளை பிடித்தனர். அவற்றை களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கொண்டு சென்று விட ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து இன்னும் 2 நாட்கள் குரங்களை பிடித்துச் செல்லும் பணி நடைபெறும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக