தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இடங்களில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,

தூத்துக்குடி
தூத்துக்குடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தி.மு.க. சார்பில் 2-ம் கேட்டு பகுதியிலுள்ள ரெயில் நிலையத்துக்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில்,கீதாஜீவன், எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் ஆனந்தசேகர் ஆகியோர முன்னிலையில் தி.மு.க.வினர் சென்றனர். காலை 11.45 மணிக்கு சென்னையிலிருந்து வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்தில் வந்து நின்றது. அந்த ரெயில் முன்பு தி.மு.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர். சுமார் 5 நிமிடத்துக்கு பின் மறியலை கைவிட்டு தி.மு.க.வினர் ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறி சென்றனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில்- கோவை பாசஞ்சர் ரெயில் வந்தது. உடனே தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் ஏராளமானவர்கள் ரெயிலின் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மாவட்ட அவை தலைவர் பெருமாள், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாராம், நகர செயலாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். சிறிது நேரத்தில் ரெயில் புறப்பட்டு சென்றது.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் சண்முகபுரம் ரெயில்வே கேட்டில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்துக்கு திரண்டனர். வழக்கமாக காலை 8 மணியளவில் திருச்செந்தூர் ரெயில் நிலையத்துக்கு வரும் சென்னை- திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 2½ மணி நேரம் தாமதமாக காலை 10.30 மணியளவில் திருச்செந்தூர் சண்முகபுரம் ரெயில்வே கேட் அருகில் வந்து கொண்டிருந்தது.
அனிதா ராதாகிருஷ்ணன்
உடனே அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் ரெயில் தண்டவாளத்தில் நின்று மறியலில் ஈடுபட்டனர். அங்கு ரெயில் நின்றதும், சிலர் ரெயில் என்ஜின் மீது ஏறி நின்று, போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், பாலசிங், நகர செயலாளர்கள் மந்திரமூர்த்தி, ராமஜெயம், ராஜசேகர், ரவி செல்வகுமார், ஆறுமுகநேரி முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம், மேல ஆத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரெயில் மறியலில் ஈடுபட்டவர்களிடம் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
3 ரெயில்கள் ரத்து
தி.மு.க.வினரின் ரெயில் மறியல் போராட்டத்தால், திருச்செந்தூரில் இருந்து காலை 11.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் பாலக்காடு பாசஞ்சர் ரெயில், மாலை 4.35 மணி, மாலை 5.55 மணிக்கு நெல்லைக்கு புறப்பட்டு செல்லும் பாசஞ்சர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக