தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரம் போப் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (ஜன. 21) நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், புதுவாழ்வு திட்டம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் சனிக்கிழமை காலை 9 முதல் இம்முகாம் நடைபெறுகிறது. இதில், வேலைவாய்ப்பற்ற 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தங்களது சுய விவரங்கள் மற்றும் கல்வி சான்றிதழுடன் போப் கலைக்கல்லூரியில் காலை முகாம் தொடங்கும் முன்பு பெயர் பதிவு செய்து பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 94450 34219, 94450 34220, 94450 34221 ஆகிய செல்லிடப்பேசி எண்களை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக