திங்கள், 23 ஜனவரி, 2017

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை போலீஸ் வலைவீச்சு



குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில்  உண்டியலை  உடைத்து  கொள்ளை போலீஸ் வலைவீச்சு
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்து சென்ற 2 மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்திருப்பேரை, 

முத்துமாலை அம்மன்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலின் கொடை விழா ஆண்டு தோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை நடத்தப்படும். அன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். அதே போல் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அம்மனை தரிசித்து செல்வார்கள்.

இந்த கோவிலில் 10–க்கும் மேற்பட்ட உண்டியல்கள் உள்ளன. அந்த உண்டியல்களை சுற்றி பாதுகாப்பாக கிரில் கேட் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலின் அர்ச்சகர்களான ராமஜெயம், ஆதிநாராயணன் ஆகியோர் தினமும் காலை 6 மணிக்கு கோவில் நடையை திறந்து பூஜைகள் நடத்துவர். இரவு 7 மணி முதல் 8 மணி வரைக்குள் கோவில் நடை சாத்தப்படும். அதேபோல் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிக்கப்பட்டு, கோவில் நடை சாத்தப்பட்டது.

உண்டியல் உடைப்பு

நேற்று காலை 6 மணிக்கு அர்ச்சகர் ராமஜெயம் கோவிலை திறந்து உள்ளே சென்றார். அங்கு கோவில் மூலஸ்தானம் அருகே அமைக்கப்பட்டு இருந்த ஆள் உயர எவர்சில்வர் உண்டியலை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கிரில் கேட் உடைக்கப்பட்டு இருந்தது. அருகே சென்று பார்த்த போது, மர்ம மனிதர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளை அடித்து சென்றதும், மற்ற 2 உண்டியல்களை உடைக்க முயன்றுள்ளதும் தெரியவந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன.

போலீசார் தீவிர விசாரணை

இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதல்கட்ட விசாரணையில்,‘ ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததையடுத்து கோவில் நிர்வாகிகள், உண்டியலில் பக்தர்கள் செலுத்தி இருந்த நேர்த்திக்கடன் பணத்தை எண்ணி, கடந்த டிசம்பர் மாதம் 29–ந்தேதி வங்கியில் செலுத்தி உள்ளனர். அதன்பிறகு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய நேர்த்திக்கடன் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

2 பேருக்கு வலைவீச்சு

தொடர்ந்து போலீசார், கோவிலில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை சோதனை செய்தனர். இதில் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்குள் 2 மர்ம மனிதர்கள் புகுந்து, உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்து சென்ற காட்சி பதிவாகியிருந்தது. அந்த மர்ம மனிதர்கள் கோவில் கோட்டை சுவர் ஏறி உள்ளே வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கின்றனர். 

கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை 
வைத்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர் 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...