செவ்வாய், 31 ஜனவரி, 2017

ஏரலில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை



ஏரலில்
வாலிபர் கத்தியால் குத்திக்கொலை
ஏரலில் வாலிபரை கத்தியால் குத்திக் கொலை செய்து, தாமிரபரணி ஆற்றில் உடலை வீசிச் சென்ற மர்மக்கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏரல்,

வாலிபர் கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பஸ் நிலையத்தின் தெற்கு பகுதியில் தாமிரபரணி ஆற்றின் நடு பகுதியில் சிறிதளவு தண்ணீர் தேங்கி உள்ளது. அதில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் நேற்று தலைகுப்புற பிணமாக கிடந்தார். அவர் பச்சை நிறத்தில் கருப்பு கோடு போட்ட சட்டையும், லுங்கியும் அணிந்து இருந்தார்.

இதுகுறித்து வாழவல்லான் கிராம நிர்வாக அலுவலர் முத்துசெல்வன், ஏரல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாதவன், இன்ஸ்பெக்டர்கள் கிங்ஸ்லி தேவ ஆனந்த் (ஏரல்), வெங்கடேசன் (ஸ்ரீவைகுண்டம்), சிவலிங்கம் (ஆழ்வார்திருநகரி) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

மதுகுடிக்க வந்தபோது...

ஆற்றில் வாலிபர் பிணமாக கிடந்த இடத்தின் அருகில் மணலில் ரத்தக்கறை படிந்து இருந்தது. கொலை செய்யப்பட்ட அவருடைய உடலை இழுத்துச் சென்று, ஆற்றில் வீசியதற்கான தடமும் பதிந்து இருந்தது. கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவில் ஏராளமான காலி மது பாட்டில்கள் கிடந்தன.

நேற்று முன்தினம் இரவில் தாமிரபரணி ஆற்றில் மது குடிக்க வந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? அல்லது மது குடிக்க அழைத்து வந்து நண்பர்களே தீர்த்து கட்டினரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

கொலை நடந்த இடத்தை போலீஸ் மோப்ப நாய் மோப்பம் பிடித்தது. பின்னர் அது ஏரல் சிவன் கோவில் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் வரையிலும் ஓடிச் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

போலீசார் தீவிர விசாரணை

கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலை கும்பல் எது? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...