ஏரல், பிப். 14: ஏரலில் ஷாப்பிங் சென்டர் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான சிகரெட் பண்டல்களை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.ஏரல் அருகே சென்னல்மாநகரைச் சேர்ந்த முருகேசன் மகன் முத்துக்குமார். இவர் ஏரல் பஸ் நிலையம் அருகில் கீழக்காட்டு ரோட்டில் தனது வீட்டின் கீழ் பகுதியில் ஷாப்பிங் சென்டர் நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்கு கீழே வந்த போது கடையின் பின்பக்கம் உள்ள கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். கடைக்குள் சென்று பார்த்த போது ரூ.3 லட்சம் பெறுமான சிகரெட் பண்டல்கள் மற்றும் பணம் ரூ.10 ஆயிரம் திருட்டு போய் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து முத்துக்
குமார் புகாரின் பேரில் ஏரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக