புதன், 14 பிப்ரவரி, 2018

ஏரல் அருகே ஆத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கடைகளையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை



பிப். 15: ஆத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கடைகளையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, புகையிலை கைப்பற்றி அழித்தனர். இது குறித்து உணவு பாதுகாப்பு ஆழ்வை வட்டார அலுவலர் கூறுகையில், ‘‘தடைசெய்யப்பட்ட பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க சென்னை ஆணையர் அமுதா உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் வழிகாட்டுதலின்படி சுமார் 12 கடைகளில் நடத்திய சோதனையில் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கைப்பற்றி அழித்துள்ளோம்’’ என்றார்.  சோதனையில் உடன்குடி உணவு பாதுகாப்பு அலுவலர் கணேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...