வியாழன், 22 பிப்ரவரி, 2018

ஏரலில் திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி






ஏரல்,  பிப். 22: திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் ஏரல் நகர  திமுக சார்பில் ஏரலில் கிரிக்கெட் போட்டி நடந்தது. துவக்க விழாவுக்குத் தலைமை வகித்த ஒன்றியச் செயலாளர் பி.ஜி. ரவி, கிரிக்கெட் போட்டியைத்  துவக்கி வைத்தார். ஏரல் நகரச் செயலாளர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். 

இப்போட்டியில் ஏரல், திருவழுதிநாடார்விளை, மொட்டத்தாதன்விளை, புளியநகர்,  சிவத்தையாபுரம், புதுக்கோட்டை, பண்டாரவிளை, சிறுத்தொண்டநல்லூர்,  வாழவல்லான், உமரிக்காடு, புதுமனை உட்பட 18 அணிகள் பங்கேற்றுள்ளன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கோப்பை மற்றும் பரிசு வழங்குகிறார்.

துவக்க விழாவில் மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ராயப்பன்,  பாலமுருகன், சுபமாரியப்பன், பிரபாகரன், ராமசுப்பிரமணியன், வைகுண்டம்  ஒன்றிய துணை செயலாளர் மகராஜன், ஏரல் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர்  மணிவண்ணன், சாயர்புரம் நகரச் செயலாளர் வரதராஜ் ஸ்டாலின், நகர துணைச் செயலாளர்  கிறிஸ்டோபர், இளைஞர் அணி கண்ணன், ஒன்றிய அவைத் தலைவர் சாதிக்குல் அமீன்  மற்றும் கொற்கைமாறன், மணி, நிக்ஷன், முத்துராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...